பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மணப்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், திருச்சி புறநகர் மாவட்டம், மணப்பாறை வட்டக்குழு சார்பில்  கடுமையாக உயர்ந்துள்ள பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று 25.06.2021 காலை 10 மணிக்கு மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட பொருளாளர் தோழர். அய்யாவு தலைமை வகித்தார்.  வட்ட துணை தலைவர் வேலுசாமி, வட்டக்குழு உறுப்பினர் தோழர். வினோத் போராட்டத்தை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் தோழர். ஆனைமுத்து போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். போராட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments