தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ் பற்றிய கவர் ஸ்டோரி

 



தமிழகத்தின் 30  வது  புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக  சைலேந்திர பாபு ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் .


 கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார்.

 காவல்துறை உதவி கண்காணிப்பாளராக (ADSP) 1989ல் காவல்துறை பணியை சைலேந்திர பாபு தொடங்கினார். அன்று முதல் இன்று வரை தனது பணிகளுக்கிடையே தொடர்ந்து மாணவர்களிடையேயும், இளைஞர்களிடமும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் கருத்துகளை பேசியும், எழுதியும்  வருகிறார்.

செங்கல்பட்டு, கடலூர் காஞ்சிபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக  பணியாற்றிய சைலேந்திர பாபு. பின்னர், சென்னை அடையாறில் துணை ஆணையராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்ற அவர், சென்னையில் இணை ஆணையராகவும் பணியாற்றி உள்ளார்.

தீயணைப்பு துறையின் ஏடிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பு வகித்த  2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாம்பரம் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நீரில் மூழ்கிய பொதுமக்களை காப்பாற்றினார். 

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக குடியரசுத்தலைவர் விருது, உயிர் காக்கும் பணிகளை மேற்கொண்டமைக்கான பிரதம மந்திரி விருது, தமிழக முதலமைச்சரின் கேலண்டரி விருது, தமிழக சிறப்பு டாஸ்க் ஃபோர்சின் கேலண்டரி காவல்துறை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் சைலேந்திர பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


மென்மேலும் இவரது பணி சிறக்க "அக்னி சிறகு" பத்திரிகை குழுமம் சார்பாக வாழ்த்துகிறோம் 











Post a Comment

0 Comments