பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் மணப்பாறையில் நடைபெற்றது.

 

30.06.2021

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலத்தில் இருந்து சி.பி.ஐ., சி.பி.எம். ,விடுதலை சிறுத்தைகள் கட்சி,  சி.பி.ஐ.(எம்.எல்) சார்பில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்துக்கு பாடைகட்டி ,தீசட்டி எடுத்து  நகரின் முக்கிய வீதி வழியக  சென்று  மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன்,  சூளியபட்டி .ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துளசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிலாளர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் பழ.குழந்தை அரசு , சி.பி.ஐ.(எம்.எல்) நகர  செயலாளர் P.பாலு, ஆகியோர் தலைமை வகித்தனர், 

ஆர்ப்பாட்டத்தை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  புறநகர் மாவட்ட செயலாளர்  இந்திரஜித்,  சி.பி.ஐ.(எம்.எல்)) மாவட்ட செயலாளர் .தேசிகன் சி.பி.எம் ஷாஜகான்  விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் மதனகோபால் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள்,

சி.பி.ஐ., சி.பி.எம். ,விடுதலை சிறுத்தைகள் கட்சி,  சி.பி.ஐ.(எம்.எல்)  நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர். 



Post a Comment

0 Comments